Sathyarajkumar

Sathyarajkumar-சத்யராஜ்குமார்

Close

சிறுகதைகள்

ஏதாவது ஒரு வகையைத் தேர்ந்தெடுக்கவும்

ராட்சஸம்

சிறுகதை - கல்கி - Kalki 24-10-2010

எனக்கு மண்டையைப் பிய்த்துக்கொள்ளலாம் போலிருந்தது. டி.வி. போன்ற சாதனங்கள் கண்டுபிடிக்கப்படாத அந்த நாட்களில் அம்மாவின் நியூஸ் சேனலே பொன்னம்மாதான் என்ற விஷயம் என் மாடர்ன் மண்டைக்குப் புரிய மேலும் சில வருஷங்கள் பிடித்தன.

அந்நிய துக்கம்

முதல் பரிசுக் கதை – அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 1994 - Kalki 07-08-1994

அன்றைக்கு அழகு ரொம்ப படபடப்பாயிருந்தான். எந்த வண்டி வந்தாலும் பேய்த்தனமாக ஓடிப்போய், “கல்லே…கல்லே…” என்று வெறி பிடித்த மாதிரி கத்தினான். அவன் சத்தத்தையும், வேகத்தையும் பார்க்க ராக்குவுக்கே பயமாய் இருந்தது.

உள்காயம்

இரண்டாம் பரிசுக் கதை – அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 1996 - Kalki 07-08-1996

அருவருப்பான முள்தாடி முகத்தோடு ஓர் ஆசாமி அவளுக்கு நேர் பின்னே நின்றிருந்தான். சாராய நாற்றம் குப்பென்று நாசியில் அறைந்தது. பூஞ்சோலை உஷ்ணப் பார்வையில் அவனை முறைத்ததும், கை பின்வாங்கியது.

குறுநில மன்னர்கள்

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 1998 - தேர்வு பெற்ற கதை - Kalki 11-08-1998

"எம் பேர் சண்முகசுந்தரம். சுதந்தரப்போராட்டத்தில் தீவிரமா ஈடுபட்டவன். தண்டி யாத்திரை, க்விட் இண்டியா மூவ்மென்ட் எல்லாத்திலும் முன்னுக்கு நின்னு வேலை செஞ் சிருக்கேன். காந்திஜியோட அதிதீவிரமான ஃபாலோயர். எனக்குள்ள இளரத்தம் ஓடினப்ப வெள்ளைக்காரனைப் பார்த்துக் கொதிச்சுக் கொதிச்சுபோராட்டாத்தில் குதிச்சேன். என்னைப்போல லட்சம் பேர். அதுக்குப் பலனா சுதந்தரம் கிடைச்சது. ஆனா, இன்னமும் ரத்தம் கொதிக்கறது மட்டும் நிக்கலை. பாம்பு வாயிலிருந்து மீட்டு முதலை வாயில் கொடுத்த கதைதான் நடந்திருக்கு."

Copyright ©சத்யராஜ்குமார். கருத்துக்களை அனுப்ப srk.writes@gmail.com