சத்யராஜ்குமார்
எழுதியவை
சத்யராஜ்குமார் பற்றி


சிறுகதை தொகுப்பு

குமுதம்

விகடன்

கல்கி

சாவி

துகள்கள்

 

என்னை எழுதியவர்கள்

மைய விலக்கு

கல்லறை ஆட்டம்

3D கதைகள்

 

இன்று

 
சிறுகதை
சிறுகதைகள்

பெண் பார்த்துப் பார்

செல்போனில் சில்பா பேசியதும் நான் பரபரப்பானேன்.

” ரூட் ஒன் நார்த் எடுத்திருக்கேன். அபார்ட்மென்ட்டுக்கு எப்படி வரணும்? “

” இன்னும் ரெண்டு மைல்தான். வலது பக்கம் வால் மார்ட் வரும். எதிர்ல லஃபாயட் கோர்ட் ! அபார்ட்மென்ட் நம்பர் பத்தொன்பது. “

வி. வெளியில் ஒரு குரல்

சிறுகதை

சாவி – 27 ஜூலை 1994

இண்ட்ஸ்டாக்-2 இந்திய விண்வெளிக் கலம் மூன்றடுக்கு ராக்கெட்டின் க்ரையோஜெனிக் வீச்சில் அசுர வேகத்தில் வாயு மண்டலத்தைக் கடந்தது. முட்டை வடிவ சாளரத்தைச் சுற்றிலும் அடர்த்தியாய் அண்டவெளி இருட்டு. சிலுசிலுத்த நட்சத்திரப் புள்ளிகள்.

” திட்டமிட்ட உயரத்தை திட்டமிட்ட வினாடியில் கடந்து கொண்டிருக்கிறோம். இந்த செவ்வாய் கிரகப் பயணம் வெற்றியடைந்தால் விண்வெளி இயலில் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும். இல்லையா ஆத்மா?”

காதல்

சிறுகதை

- குமுதம் – 23.02.1995

அவன் செத்துக் கிடந்தான். அரசாங்க ஆஸ்பத்திரியின் அழுக்கான வார்டு.

” ஸ்டார்வேஷன் டெத். நாலு நாளா கொலைப்பட்டினி கிடந்திருப்பான் போல. பசி மயக்கத்தில் கிறங்கி, நடு ரோட்டில் மயங்கி விழுந்துட்டான். “

ஏட்டிடம், ” இவன் பாக்கெட்டை சோதனை போடு. ” என்றார் இன்ஸ்பெக்டர்.

சர்ட் பாக்கெட்டில் ரொனால்ட்ஸ் பேனா. பல்லவன் பஸ் டிக்கட். கசங்கிப் போன ஓர் இன்லேண்ட் லெட்டர். அழகான நெளிவுகளோடு நீல இங்க் எழுத்துக்கள்.

” லெட்டரைப் படி. “

” அன்புள்ள விஸ்வத்துக்கு… “

சாமீய் !

சிறுகதை

- குமுதம் – 08.01.1998

மேலாடை இல்லாத பெண்கள்.

ரத்தீஷ் உற்சாகத்தில் துள்ளினான். அவனைக் கூட்டி வந்தது இமாலயத் தவறு என்பதை தாமு தாமதமாய் உணர்ந்தான்.

நரிக்கொம்பு ஃபாரஸ்ட்டின் மையத்தில் காட்டிலாகா ஜீப் குலுங்கி்க் குலுங்கிப் போய்க் கொண்டிருந்தது. சூரிய வெப்பம் விழாத அடர்த்தியான காட்டுப் பிரதேசம்.

ரத்தீஷ் படபடத்தான்.

” தாமு, நீ காட்டுக்குள்ளே இல்லேடா. சொர்க்கத்தில் இருக்கே. “

” என்ன உளர்றே ? “

” இவங்கல்லாம் பெண்களா ? தேவதைகள். றெக்கை இல்லாத தேவதைகள். இத்தனை நாளா எனக்குத் தெரியாம போச்சே. “

உள்காயம்

இரண்டாம் பரிசுக் கதை – அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 1996 - 07-Aug-1996

நாக்கில் நரநரவென்று உறுத்தல். பூஞ்சோலை சுவரோரமாய் இருந்த தொட்டியில் உமிழ்ந்தாள். எச்சில் கறுப்பாய் ரசாயன மண் கலந்து வந்தது.

சற்று தள்ளி ஜோல்ட்டிங் இயந்திரத்தின் அருகே நிற்கிற பதினெட்டு வயது இளைஞனுக்குக் குரல் கொடுத்தாள்.

” ரத்தினம். கடைசி பேட்ச் பெட்டிங்க வருது பாரு. மெஷின்ல ஏத்து.”

காலையிலிருந்து இந்த நிமிஷம் வரை பூஞ்சோலையை அதிஅதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ரத்தினம் சுதாரித்து தன்னருகே ஓடும் தண்டவாளத்தில் பார்வையைப் போட்டான்.

அந்நிய துக்கம்

முதல் பரிசுக் கதை – அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 1994 - 07-Aug-1994

தேய்பிறைகள்

சிறுகதை

- ஆனந்தவிகடன் – 10.05.1998

” மூணு வயசாச்சு. ” – ஸ்கூல்ல சேர்க்கிறப்ப பிரின்சிபல் மேடம் கிட்டே அம்மா அப்படித்தான் சொன்னா.

ஸ்கூல்ன்னா எனக்குக் கொள்ளை இஷ்டம்.

” அஸ்மிதா, நீ படிக்கப் போற கான்வென்ட் இதான். ” ஸ்கூட்டர்ல முன்னாடி நிக்க வெச்சுக் கூட்டிட்டுப் போறப்ப அப்பா காட்டியிருக்கார்.

எவ்ளோவ் பெரிய கட்டிடம் ! ஒரே மாதிரி டிரஸ் போட்டு அக்கா, அண்ணா எல்லாம் ஓடிப் பிடிச்சு விளையாடிட்டிருந்தாங்க.

“ஸார், நாம போயாகணும்”

சிறுகதை

- ஆனந்தவிகடன் – 08.09.1996

மின் நகரைக் கடக்கும்போது ஒரு கும்பல் பாதி ரோட்டை மறித்து வேகமாகக் கையை அசைத்தது. தயானந்த் அவசரமாய் பிரேக்கை மிதித்தான். ஜன்னலைப் பார்த்தான் வரது.

ஜன்னல் கண்ணாடியில் தலைகள் திரண்டன. நாற்பது வயதுக்காரர் ஒருவர் பதட்டத்துடன் சொன்னார். ” தண்ணித் தொட்டிக்குள்ள குழந்தை விழுந்துருச்சுங்க. அரை மணி நேரமா உயிருக்குப் போராடுது. ஆஸ்பத்திரில விட்டுருங்கய்யா… “

வரது ஜன்னல் கண்ணாடியை ஏற்றி விட்டுக் கொண்டே, ” நாங்க அவசரமா போயிட்டிருக்கோம். வேற வண்டி பாருங்க. “

பிழைப்பு

எல்லோரும் வேலைக்குப் போய் விட்டார்கள். மயான அமைதி. ஹீட்டர் மட்டும் உறுமிக் கொண்டிருந்தது. திரைச் சீலையை விலக்கி, கண்ணாடிக்கு வெளியே பார்த்தபோது – வெள்ளை வெளேரென்று நாலு இஞ்ச்சுக்கு பனி. ஒரு ஈ காக்காய் இல்லை. சை, இதுதான் அமெரிக்காவா?