சத்யராஜ்குமார்
எழுதியவை
சத்யராஜ்குமார் பற்றி


சிறுகதை தொகுப்பு

குமுதம்

விகடன்

கல்கி

சாவி

துகள்கள்

 

என்னை எழுதியவர்கள்

மைய விலக்கு

கல்லறை ஆட்டம்

3D கதைகள்

 

இன்று

 
துகள்கள்
சின்னச் சின்ன அமெரிக்க சம்பவங்கள். கொஞ்சம் நிஜம். கொஞ்சம் கதை.

பாலூட்டிகள்

அடி வயிற்றில் திடுமென உதைத்தது குழந்தையா, இல்லை பயமா? ” எந்த நிமிஷம் வேணா லேபர் பெயின் வரலாம். இனிமே வேலைக்குப் போக வேணாம். லீவ் போட்ருங்க. ” என்றார் டாக்டர்.

திரும்பிப் பார்த்தபோது, ஷங்கரின் முகத்திலும் அதே பயத்தை உணர முடிந்தது. இன்ஷ்யூரன்ஸ் கார்டைக் காட்டி விட்டு, மெதடிஸ்ட் ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்தோம்.

காருக்கு வந்து, ஜார்ஜ் டவுன் சாலையில் வழுக்கிச் செல்லும் போதும் இருவரும் அமைதியாகவே இருந்தோம். ஆனால் என்னுடைய மவுனமும், ஷங்கரின் மவுனமும் நிறைய பேசிக் கொண்டன.

” கடைசியில் அந்த நாள் வந்தே வந்துருச்சு ஷங்கர். “

இடமாறு தோற்றப் பிழை

சுனாமியே வந்து கதவைத் தட்டினாலும் தலையைப் பத்து முறை வாரிக் கொண்டு இரண்டாம் தடவையாக ·பேர் அண்ட் லவ்லியை அப்பிக் கொண்டு சாவகாசமாகத்தான் வருவான் ப்ரதீப்.

காரை ஸ்டார்ட் பண்ணி உட்கார்ந்து ஐந்து நிமிஷங்கள் ஆகி விட்டன. பொறுமை இழந்து செல்போனைத் தடவினேன். கையில் சில பூங்கொத்துக்களோடு ஒரு வழியாய் வந்தே விட்டான்.

” இதை விட்டுட்டோம். ” சொல்லிக் கொண்டே அவசர அவசரமாய்க் காரின் உடம்பில் பூக்களை ஒட்டினான். ஏற்கெனவே கார் பூக்களாலும் பலூன்களாலும் நிரம்பி ஜிகுஜிகுவென இருந்தது.

தள்ளுபடி

இளம் மனைவி அனிதாவுக்கு இன்னும் நிறைய விநோதங்கள் இங்கே அமெரிக்காவில் மிச்சமிருந்தன.

தேங்க்ஸ் கிவிங் டே – க்காக வெள்ளைக்காரனை விட ஆவலாகக் காத்திருந்தாள். அதையொட்டி இனி வரும் நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் ஆபிஸ் சற்றே மந்தகதியில்தான் இருந்தது. அனிதாவிடமிருந்து இதற்குள் நான்கு முறை போன் வந்து விட்டது.

” என்னங்க, எந்த கடையில் என்ன மலிவாக் கிடைக்கும்ன்னு ஃப்ளையர்ஸ் கொண்டு வந்து போடுவாங்கன்னிங்க. அப்படி ஒண்ணுமே வரலையே ? “

இந்தியன்

இது விஷப் பரீட்சை என்று எனக்குத் தெரியும். கரேனிடம் வேண்டாம் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவள் பிடிவாதம் பிடித்தாள்.

” கண்டிப்பா நாம நியுஜெர்ஸியிலிருக்கும் உன்னோட அண்ணன் குடும்பத்தோட ஒரு வாரம் தங்கியிருக்கப் போறோம். இந்தியக் குடும்பப் பழக்க வழக்கங்களை எல்லாம் நான் கத்துக்கப் போறேன். அப்புறம்தான் நம்ம கல்யாணம். அப்பதான் உங்க அம்மா அப்பாவுக்குப் பிடிச்ச பொண்ணா என்னால நடந்துக்க முடியும். “

அதிர்ஷ்டக்காரன்

” உன் கூட கொஞ்சம் பேசணும். ப்ரேக் ரூமுக்கு வரியா? ” என்றாள் டெய்ஸி.

நிர்வாகக் குழுவிலிருக்கும் அவளோடு பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. வழியில் தென்பட்டாலோ, ஆல் ஹேண்ட்ஸ் மீட்டிங்கில் பார்த்துக் கொண்டாலோ லேசாய்ப் புன்னகைத்து ஹலோ சொல்லிக் கொள்வதோடு சரி. இன்ட்டர்காமை வைத்து விட்டு ப்ரேக் ரூமுக்குப் போன போது – கோக் பாட்டிலோடு உட்கார்ந்திருந்தாள்.

என்னைப் பார்த்து, ” கங்ராட்ஸ். ” என்று சிரித்தாள்.

” எதுக்கு? “

குப்பை

ஷீலாவை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். அவளுடன் அறையைப் பகிர்ந்து கொண்ட நாட்கள் கொஞ்சமே கொஞ்சம் என்றாலும், மின்னல் மாதிரி விருட்டென்று கண்ணில் அடித்து விட்டுப் போன வித்தியாசமான அனுபவம்.

வாய்ஸ் மெயிலில் அவள் பெயரைக் கேட்டதும் முதலில் இந்தியப் பெண் என்றுதான் நினைத்தேன். அபார்ட்மென்ட்டைப் பகிர்ந்து கொள்ள ஆள் வேண்டும் என்று லோக்கல் பத்திரிகையில் இலவச விளம்பரம் தந்ததால் – கூப்பிட்டிருந்தாள். நேரில் வந்து, ” நான் ஷீலா தாம்ஸன் ! ” என்று கை குலுக்கியபோதுதான், அட அமெரிக்கா எனத் திகைத்தேன்.

கனேடியன் விஸ்கி… அக்கேஷனலி அபின்…

அவளுடைய சாக்லேட் குரல், ” ஆமாம், நான் ரவிதான் பேசறேன். ” என்று சடுதியில் என்னைப் பொய் சொல்ல வைத்தது.

2000 சதுர அடி சொர்க்கம்

அமெரிக்க போலிஸ்காரர் எங்களை நோக்கி வர ஆரம்பித்ததும் – எனக்கு சர்வமும் நடுங்க ஆரம்பித்தது.

மெரில் அப்போதும் என்னை விடவில்லை. ” கமான், டான்ஸ் மேன். ” என் இடுப்பை கைகளால் வளைத்துக் கொண்டு இசைக்கேற்றபடி மெதுவாய் அசைந்து கொண்டே இருந்தாள். வேலியில் போகிற ஓணானை எடுத்து மடியில் கட்டிக் கொள்வது இதுதானா?

ஃபோட்டோகாப்பி எந்திரம் அருகே அவள் எடுத்து முடிக்க காத்திருந்த போது – எதையாவது பேச வேண்டுமே என்பதற்காக, ” மெரில், வார இறுதிகளில் நீ என்ன பண்ணுவே? ” என்று அந்த வெள்ளிக் கிழமையின் சாயந்தரத்தில் கேட்டு வைக்கப் போக, இந்த விபரீதம் ஆரம்பித்தது.

7 + 1 = 9

ஆபிசில் அதி கவர்ச்சியான பெண் யாரென்று கேட்டால் கிறிஸ்டி என்பது உடனடி பதிலாக இருக்கும். ஏழும் ஒன்றும் எட்டு என்பது எப்படி மறுக்க முடியாத உண்மையோ, அது போல இதிலும் மாறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பே இல்லை.

மகள் லிசியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு என்னையும் அழைத்திருந்தாள். கிறிஸ்டி கல்யாணமானவள் என்றால் நம்புவது கஷ்டம். தினமும் அரை மணி நேரம் ஒர்க்அவுட் பண்ணி உடம்பை சிக்கென்று வைத்திருந்தாள். பொறுக்கியெடுத்து அவள் அணியும் உடைகளை வேறு எந்தப் பெண் உடுத்தினாலும் அது ஆபாசம் போலாகி விடும். இதை நான் அவளிடமே சொல்லியிருக்கிறேன். ட்யூப்லைட் போட்டதைப் போலப் பளீரென்று சிரித்தாள்.

பஸ் ஸ்நேகம்

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த என்னைப் பார்த்து அவள் தயக்கமாய், ” ஹலோ ” சொன்னாள். என் முகத்தில் அரும்பிய புன்னகையைத் தொடர்ந்து பேசத் துவங்கினாள். ” என் பேர் உமா. ஆபிஸ்ல உங்களைப் பார்த்திருக்கேன். நீங்களும் எஸ்பிசி-லதானே வேலை செய்யறிங்க ? “

” நானும் உங்களைப் பார்த்தேன். இன்னிக்குக் காலைலதானே ஜாயின் பண்ணினிங்க? “

தலையாட்டினாள். ” ஆமா. ஆனா எல்லாரும் என்னை பரம விரோதி மாதிரி பார்க்கறாங்க. ஏன்னு புரியலை. “

” நீங்க அமெரிக்காவுக்குப் புதுசு. அதுவும் L1 விசாவில் வந்திருக்கிங்க இல்லையா அதான். “

” அதனால? “