With Novelist Rajeshkumar
With Novelist Rajeshkumar

சத்யராஜ்குமார் பற்றி

எளிமையான வாசிப்புக்கு முதலிடம் தந்து எழுதுபவர்...

சத்யராஜ்குமார் தமிழின் நவீன எழுத்தாளர்களில் ஒருவர். தமிழகத்தின் அனைத்து முன்னணி வார, மாத இதழ்களிலும் சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது சிறுகதை இலக்கிய சிந்தனை அமைப்பின் அங்கீகாரம் பெற்றது. கல்கி, கலைமகள், அமுதசுரபி, விகடன் போன்ற பல்வேறு இதழ்களில் பரிசு பெற்ற பல சிறுகதைகள் எழுதியவர். பொழுதுபோக்குக் கதைகளை எழுத ஆரம்பித்தவர், பின்னர் கவனிக்கத்தக்க பல சிறுகதைகளையும் படைத்துள்ளார். அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் அமெரிக்க இந்தியர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சிறுகதைகளை அதிகம் படைத்து வருகிறார்.

சத்யராஜ்குமாரின் முதல் சிறுகதை 1985-ஆம் ஆண்டு சாவி வார இதழில் வெளியானது. அதே வருடம் இதயம் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் சிறுகதைக் களஞ்சியம் என்னும் வாரமிருமுறை இதழில்  ஆசிரியர் மணியன் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து பல ஆண்டுகள் எல்லா வார மாத இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொழுதுபோக்குச் சிறுகதைகளை எழுதி வந்தவர், 1994-ஆம் ஆண்டு தனது எழுத்தின் போக்கை மாற்றியமைத்துக் கொண்டு கல்கியில்அந்நிய துக்கம்என்னும் முதல் பரிசுக்குரிய கதையை எழுதினார். தொடர்ந்து கல்கி, கலைமகள், அமுதசுரபி போன்ற இதழ்களில் சமூக அக்கறையும், உணர்வுபூர்வமும் கொண்ட  பரிசுக்குரிய பல கதைகளைப் படைத்தார். 

2003-ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தவர் அங்கே வாழும் இந்தியர்களின் அமெரிக்க வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சிறுகதைகளைத் தனது எழுத்துக் களமாக ஆக்கிக் கொண்டுள்ளார். இவ்வகை சிறுகதைகளை அவ்வப்போது தமிழக வார இதழ்களில் எழுதுவதோடு அல்லாமல் சொல்வனம், பதாகை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார். இச்சிறுகதைகள் 'நியூயார்க் நகரம்' என்ற தொகுப்பாகவும் வெளிவந்துள்ளது.

இது தவிர வார இதழ்களில் பரிசு பெற்ற பலசிறுகதைகளைத் தொகுத்து திருமகள் நிலையம் 'ஒரு விநாடியும் ஒரு யுகமும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது.

'பறந்து செல்ல வா' (2016) என்னும் திரைப்படத்தின் கதை-திரைக்கதையில் பங்களித்திருக்கிறார். 'வருந்துகிறோம் -Sorry!' என்னும் குறும்படத்தை எழுதி இயக்கியதற்காக கனடா தமிழ்த் திரைப்பட விழாவில் Best Social Message Short Film Director Jury Award  பெற்றுள்ளார்.

A writer who cares about readability...

Sathyarajkumar (சத்யராஜ்குமார்) is a published author and screen writer in Tamil language who started publishing his work in all popular Tamil magazines right from the age of 19. He continued to write short stories and novels in magazines like Savi, Kumudam, Vikatan, Kalki, Kalimagal, Idhayam, Amutha Surabhi, Dinamani Kathir, Thai, Mona, Malaimathi, etc when he was doing his Bachelors in Engineering. He has bagged many prestigious awards from magazines like Kalki, Kalaimagal, Vikatan, Savi and organizations like Ilakkiya Sinthanai. After he moved to America, though he is not actively writing in magazines, time to time he writes in e-zines like Tamiloviam, in his blog and website. His Americanized short stories are popular among Tamil internet community, collection of those stories are available as e-book in Kindle. He has last published his work in Kumudam weekly dated 08 Jan 2020, a 5 week series.

He has recently entered into film industry by writing story & screen play for a Tamil feature film "Parandhu Sella Vaa" produced by 8 Point Entertainment, Singapore, directed by Dhanapal Padmanabhan ( the director of Krishnaveni Panchaalai). He also got Best Social Message Short Film Director Jury Award in Canada Tamil Film Festival for a short film called 'Sorry!' written & directed by him.

You are free to share the link to this page anywhere on social media or other websites. But copying/displaying this content on other websites or reproducing this content on any other media/format including but not limited to a book/audio/video is strictly prohibited and subject to legal action.

இந்தப் பக்கத்தின் இணைப்பை சமூக வலைத்தளங்களிலோ, பிற இணைய பக்கங்களிலோ பகிரும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் இந்தப் பக்கத்தில் உள்ள படைப்பை நகலெடுத்து வேறு தளங்களில் வெளியிடுவதோ, அல்லது இந்தப் படைப்பை நூலாகவோ, ஒலி அல்லது அசைபடம் உட்பட வேறெந்த வடிவத்திலும் மறு உருவாக்கம் செய்யும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அது சட்டப்படி குற்றமாகும்.

கதைகளில் வரும் சம்பவங்களும், பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
Admin
Admin
  • follow: